எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே தவெக தலைவர் பொதுக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகலை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு கோரிய தவெக தொண்டரணியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மங்கைமடத்தில் நிச்சயம் வெல்வோம் 2026 மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்த வாக்குறுதிகளான விவசாயிகள் மற்றும் கிராமப்புறம் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் எல்லை பிரச்சினைகள்,வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு,கல்வி மற்றும் சுகாதாரம்,அன்னபூரணி சூப்பர் 6 என உள்ளடக்கிய நாற்பது வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என 100 ரூ பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகல் பிரதிகளை தவெக தொண்டரணியின் மாவட்ட பொறுப்பாளர் தளபதி தினேஷ் தலைமையில் மங்கைமடம் கடைவிதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடையே வாக்குறுதிகளை கூறி விசில் சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினார்.

இதில் மாவட்ட தொண்டரணியை சேர்ந்த டார்வின், வழக்கறிஞர் சிவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நகல் பிரதிகளை பொது மக்களிடையே வழங்கினர்.

.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *