மேச்சேரி காவிரி கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வகுமார் அவர்கள் பாரதியார் வழி பெண் சிந்தனைகளைக் கூறியதோடு “எண்ணற்ற துறைகள் இருந்தாலும் பெண்ணற்ற துறைகள் இல்லை” என்று பெண்களை மேன்மைப்படுத்தி வரவேற்புரையாற்றினார்.


சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தி காவிரி கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் அவர்கள் பெண்கள் விடாமுயற்சி, சுயசிந்தனையை வளர்த்துக் கொண்டு அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அளவிற்கு வளர்ச்சிப் பாதையில் சென்று தனக்கென உயர்கொள்கைகளை வகுத்து வாழ்வில் வெற்றிப்பாதையை அடையவேண்டும் என்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர்கள் சாதனைப் பெண்களின் சாதனைகளைக் கூறி மாணவிகளை நெறிப்படுத்தினர். மாணவிகள் தங்களின் பேச்சுகளின் மூலம் தன்னெழுச்சியை ஏற்படுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத்தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், பேராசிரியர் இளங்கோவன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் இராமநாதன், இணை செயலாளர் ஹரிசங்கர், செயல் அலுவலர் முனைவர் கருப்பண்ணன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், மற்றும் அனைத்து உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் நிறைவாக காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கவிதா நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *