தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் வெற்றி நிச்சயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளிகள், அரசின் ஐந்து ஆண்டு சாதனைக்காகவும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 7,300 வாழ்த்து மடல் அனுப்பி ஐந்து ஆண்டு சாதனைக்காக நன்றி சொல்லும் சர்வதேச மகளிர் தின விழாவில் ஆறு பயனாளிகளுக்கு தையல் பவர் இயந்திரம் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ரம்ஜான் உணவு கிட் வழங்கி இப்தார் விருந்துடன் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி முகமது ரபிக் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் வாழ்த்துரை ஆற்றினார் பயிற்சி ஆசிரியை சமீரா தலைமையில் குரூஸ் மேரி,,உமைபா,அமல்,பௌசியா சுல்தானா,தேவி,சமீரா,ஜோதி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது ..

இந்நிகழ்ச்சியில் பி. என்.ஐ கோயம்புத்தூரின் நிர்வாக இயக்குனர் முகமது நாசர் வெற்றிக்கான இலக்கு என்னும் தலைப்பில் கருத்துரை ஆற்றினார்..

மேலும் இ.சி.ஒய்.லேப் நிறுவனத் தலைவர் ரியாஸ்தீன் இன்றைய காலத்தில் செல்போன்களால் வரும் ஆபத்துக்களை எடுத்துரைத்து பயனுள்ள வழியில் பாதுகாப்பதற்கான வழிகளை எடுத்துரைத்தார்..

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய கண்காணிப்பாளர் மாலினி திட்ட விளக்கு உரை ஆற்றினார்கள் முதன்மை கருத்தாளர் நான் முதல்வன் திட்டம் ராஜா முகமது கல்வி வளர்ச்சிக்கான கருத்துரை ஆற்றினார்கள் தலைமை தபால் நிலையத்தின் அதிகாரி உமா மகேஸ்வரி சேமிப்பு என் பாதுகாப்பு எனும் தலைப்பில் விளக்க உரை ஆற்றினார்கள்..

பைத்துல் மால் நிறுவன தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.எம். ஹிதாயத்துல்லா ஆடிட்டர் முகமது கலிமுத்தீன் ஆகியோர் தையல் இயந்திரம், சான்றிதழ் மேலும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்..

சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக தலைவர்கள் இராம வெங்கடேசன்,ராக்கி கிருஷ்ணன்,அருள் தாஸ் மயிலை செந்தில்குமார், பிரிஸ்டைன் ஜெயிலாப்தீன்,அஷ்ரப் ஹஜ்ரத் ஆகியோர் உணவு கிட் நலத்திட்டங்களை வழங்கினர்


ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஜி. முஹம்மது ரஃபீக் பேசுகையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு பயனாளிகளுக்கு கொடுத்து வருகிறது அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனடையும் வகையில் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பயன்பெற்ற மகள் இருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *