தஞ்சாவூர், இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 – க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களுக்கு புனித மாதமான ரமலான் நோன்பின்போது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

இஃப்தார் விருந்தின்போது, பாரம்பரியமான பரிமாறப்படும் உணவுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றது. ரமலான் நோன்பு காலத்தின்போது ஆரோக்கியமாக உணவு உண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய ஆலோசனைக் குறிப்புகளையும் மீனாட்சி மருத்துவமனை இந்நிகழ்வில் வழங்கியது.

இஃப்தார் விருந்து நிகழ்வில் தலைமை விருந்தினராக மகாராஜா சில்க்ஸ் & மஹால் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது ரஃபி கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்திய இவான்ஜெலிக்கல் லுத்தரன் ஆலயத்தின் பாஸ்டர் ஜேக்கப் ஜெயராஜ் உட்பட, கிறிஸ்தவ மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. இந்நிகழ்வில் மீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் வரவேற்புரையாற்றினார். சிறப்புரை வழங்கிய ஓய்வு துணை காவல் கண்காளிப்பாளர் மாணிக்கவாசகம் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த செய்தியை வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அல்மாஸ் அலி மற்றும் மீரா பஸ் உரிமையாளர் சர்ஃபுதீன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *