தஞ்சாவூர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேர் பயன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா விளங்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 80 வயது கோபால் இவர் கடந்த பிப்ரவரி 20-ந் தேதி காலை சாலையில் செல்லும் பொழுது 4 சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார்.இதை தொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் பிப்ரவரி 20-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த கோபால் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக குடும்பத்தார் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி, கோபாலின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள் , தோல் ஆகியவை அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டன. , இரண்டு சிறுநீரகங்களும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கும் , தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்புகள், தஞ்சை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பின்னர் கோபால் உடலுக்கு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி. பூவதி அவர்கள் தலைமையில் அரசு இறுதி மரியாதை செய்தனர். இந்த தானத்தின் மூலம் 3 நபர்கள் பயன் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *