திருவாரூர்.,
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்கு இரயில் சேவை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொளி காட்சி வழியாக மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி புதிய விரைவு இரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் வந்தடைந்த இரயிலுக்கு இரயில் பயணிகள் சங்கத்தினர் திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் இரயில்வே ஊழியர்கள் சார்பில் மலர்களை தூவி மேலதான முழங்க வரவேற்பு அளித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து இரயில் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.