தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கிழக்கு ஒன்றிய பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த தெருமுனை கூட்டங்கள் பொடரம்பாளையம், பழைய நவகொம்பு, வேங்கிபாளையம், மறபாளையம் மற்றும் பிலிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன இக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்சி (SC) அணி பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையேற்றார்.
கூட்டத்தில் பாஜக குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.