திருவாரூர்., மார்ச் 14
திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக கேன்கள், பாட்டில்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல்களை முழுமையாக நிரப்பி கூட்டம் கூட்டமாக நேற்று பெட்ரோல் பங்குகளை சூழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு பெட்ரோல் பங்குகள் திரும்பியுள்ளது .
திருவாரூர் பகுதியில் உள்ள 63 பங்குகளில் தேவையான அளவு பெட்ரோல் இருப்பு உள்ளது. பெட்ரோல் டீசல் குறை வாய்ப்பு இல்லை அதற்கான முன் நடவடிக்கைகள் குறித்து இந்தியன் ஆயில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல் கேன்கள், பாட்டில்களில் பெட்ரோல் தர பாதுகாப்பு கருதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் . பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்து வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.