திருவொற்றியூர் காலடிப் பேட்டை மேற்கு மாட வீதி மெயின் ரோட்டில் கடந்த 75 ஆண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் கடந்த வாரம் தான் ஆடி மாத திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று முடிவடைந்து உண்டியலில் ஏராளமானோர் காணிக்கை செலுத்தி இருக்கும் நிலையில்
நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் வாசலில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று சன்னதிகளில் வாசலில் இருக்கும் இரண்டு உண்டியல்களை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 50,000 ரூபாய்க்கு மேல் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து பின்னர் கோவில் வாசலில் மல்லிகா என்பவர் கற்பூரம் பூ பழம் தேங்காய் கடை நடத்தி வருகிறார் அவரது கடையையும் உடைத்து வியாபாரம் செய்து கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்
காலை கோவிலை பராமரிக்கும் பேபி அம்மாள் என்பவர் வந்து பார்த்த போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைத்து இருந்ததை கண்டு கோயில் தலைவர் குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்
அவர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவொற்றியூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்