கள்ளக்குறிச்சி, ஆக. 6: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்ட காலமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *