இதய நோய்கள், மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும்,இந்த புதிய தொழில் நுட்பத்தை கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி. பாரத் துவக்கி வைப்பு

கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையான ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘பிலிப்ஸ் அசுரியன் R3 பைபிளேன் கேத் லேப்’ (Philips Azurion R3 Biplane Cath Lab) வசதியை அறிமுகப்படுத்தியது.

இதற்கான துவக்க விழா,மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில்,சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி. பாரத் கலந்துகொண்டு, இந்த அதிநவீன பைபிளேன் லேப் மருத்துவ வசதியைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து பிரபல நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதேஸ்வரன் பேசுகையில், இந்தியாவில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த பைபிளேன் கேத் லேப்’ தொழில்நுட்பம் இதய நோய்கள், நரம்பியல் சிக்கல்கள் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான சிகிச்சைகளை மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ள உதவும் என தெரிவித்தார்..

குறிப்பாக , மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் இந்த தொழில் நுட்பத்தில்,குறைவான கதிர்வீச்சில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கோணங்களில் மிகத் தெளிவான பிம்பங்களைப் பெற முடியும் எனவும், இது மருத்துவர்கள் இரத்த நாளங்களின் அமைப்பை 3D முறையில் துல்லியமாகப் பார்க்க உதவுவதாக குறிப்பிட்டார்…

மேலும் ,இந்தத் தொழில்நுட்பம் குறிப்பாக பக்கவாதம் (Stroke) மற்றும் மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு மிகச்சிறந்த பயன்களை வழங்குவதாக கூறிய அவர், மூளையின் மிக மெல்லிய இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை மிக வேகமாகவும், துல்லியமாகவும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க இது பெரும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்…

விழாவில் மருத்துவ நிபுணர்கள் , ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *