வேப்பூர் மார் – 15
தமிழ்நாடு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள் சார்பில் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் தற்பொழுது போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் சிலிண்டர் மற்றும் சமையல் எரிவாயு கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது
இதனை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வீர திராவிடமணி, ஒன்றிய செயலாளர் சந்தோஷ் இணை செயலாளர் முத்துகருப்பன்,அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிசந்திரன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் முருகானந்தம், செல்வ ஆனந்த், துணை தலைவர் நல்லூர் ரமேஷ், தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் சேகர், பச்சமுத்து, குமரவேல் செந்தில்குமார் பாம்பன், திமுக சார்பில் ஒன்றிய துணை செயலர் மாரிமுத்தாள் குணா, பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தனசேகரன், துணை அமைப்பாளர்கள் நகர்பாபு, குணா, சாக்கரடீஸ் மகளிரணி ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்