ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் நூதன போராட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
செயின்ட் மேரிஸ் ஆலயம் அருகில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது.