எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான 54 வாக்கு சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீஸ்சாருடன் தமிழ்நாடு போலீஸாரும் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார்.
சீர்காழி காவல் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் வருகை புரிந்து ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காவலர் குடியிருப்பு மற்றும் காவல் நிலையம் சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தேர்தல் பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள காவலர்களின் விவரங்களை கேட்டு அறிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்பி கோ.ஸ்டாலின் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 950 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் 54 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றில் தேர்தலின் போது தமிழ்நாட்டு போலீசார் உடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை போலீஸ்சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்குச்சாவடி மையங்களில் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க படாது என்றார். மேலும் மாவட்டத்தில் 129 துப்பாக்கி உரிமம் பெற்றவர்களிடமிருந்து 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின்போது டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், நிலை எழுத்தர் கண்ணன், உதவி ஆய்வாளர் வீரராகவன் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அங்கவை ஆகியோர் உடன் இருந்தனர்