பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திருவீழிமிழலையில் திருமூலர் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழா….

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவியுடன், திருவையாறு ஒளவை அறக்கட்டளை, பெங்களூரு லாஸ்ய மேளா லயா ,மெலட்டூர் பாகவத மேளா அறக்கட்டளை இணைந்து திருமுலர் வரலாறு நாட்டிய நாடக அரங்கேற்ற விழா மார்ச் ஞாயிற்றுக்கிழமை அன்று திருவீழிமிழலை வீழிநாதேசுவரர் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திருவையாறு ஒளவைக் கோட்ட நிறுவனர் முனைவர் மு.கலைவேந்தன் தலைமையில் நடைபெற்றது. திருவாவடுதுறை நேர்முகப் பயிற்சி மைய அமைப்பாளர் டாக்டர் எஸ்.உமாமகேஸ்வரி, கவிஞர் நாக. துரையரசு திருவிடைமருதூர் ரெட்கிராஸ் தலைவர் வி.எம்.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவைத் தொடங்கி வைத்து கலைஞர்களுக்கு திருமந்திர நாட்டியக்கலைச்சுடர் விருதினை திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம் சற்குரு கண்ணன் அடிகளார் வழங்கி அருளுரை வழங்கினார்.

நாட்டிய நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்கு திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் கவாமிகள் சான்றுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

திருமுலர் வரலாறு, திருமந்திரத்தில் காணலாகும் சிறப்பான பாடல்கள் பலவற்றும் இசை நாட்டியங்களை நாட்டியக் கலை அரசி பெங்களூரு பிரியம்வதா முரளி மெலட்டூர் பாகவதா மேளா வித்யாலயா கலைக்கமுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் கரந்தை கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராஜா மணி, புலவர் மா.கந்தசாமி, புலவர் வள்ளிநாயகம் முத்துவேலு பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒளவை அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி, பெங்களூரு டாக்டர் முரளி, மெலட்டூர் கோபால கிருஷ்ணன் போன்ற பலரும் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *