தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா நடந்தது
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர். எ. சிராஜுதீன் அனைவரையும் வரவேற்றார். .
சிறப்பு அழைப்பாளராக எம்.ஆர். மருத்துவமனை நிறுவனர் , டாக்டர். ராதிகா மைக்கேல் , மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளியின் தாளாளர்,கே.பி. அறிவானந்தம் ஆகியோர் பங்கேற்று கல்வியில் சிறந்த மாணவர்களுக்கும் மற்றும் மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறுபுரையாற்றினார்கள்..
தொடர்ந்து கலைப் பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் ராஜாராம் பரிசுகளை வழங்கி பாராட்டுரை ஆற்றினார். சதய விழாக்குழுத் தலைவர்,து. செல்வம் திருக்குறள் ஒப்பிவித்தல் ,ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், தேசிய பயிற்றுநர் பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் உள்ள சாரண தேவேந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு,100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திருமதி.தேவிகா, மேலாளர் திருமதி.சரோஜினி, மற்றும் ஆதவன் லயன்ஸ் சங்கத்திலிருந்து அனந்தகிருஷ்ணன், பிரனேஷ் இன்பென்ட்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில். மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நாடகம் தத்ரூபமாக அமைந்து காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நாட்டுப்புற கலைகளான முருகன் காவடிச்சிந்து, இயற்கையை காப்பதற்கான சொல்லாடல் நாடக நிகழ்ச்சி பல்வேறு நாட்டின் சிறப்பான கலாச்சார நாட்டியம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பித்தார்கள்.