திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையினை இமாம் தொடங்கி வைத்தார். இதில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின், ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
நாகல்நகர் சந்தைரோடு, ரவுண்ட்ரோடு, நேருஜிநகர், ராமநாதபுரம் உள்பட 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், திண்டுக்கல் நகரில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.