மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் சட்டமன்றதொகுதி கூவத்தூர் ஊராட்சி உள்ளடங்கிய இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டவடபட்டினத்தில் தியாகத் தலைவி சின்னம்மா விசுவாசிகள் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் இரா.சுகன் தலைமையில் மீனவ சமுதாய நிர்வாகிகள் புரட்சித்தாய் சின்னம்மா புதிதாக ஆரம்பித்துள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது நடராஜபுரம் என்.பி.கோபு வேடவாக்கம் சி.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் மீனவ சமுதாய மக்கள் திமுக மற்றும்
தவெக கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் தாமோதரன் மற்றும் ராஜ்குமாருடன் திரளாக கலந்து கொண்டு தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் களம் காண்போம் என தங்களை விருப்பத்துடன் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.