C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதிசெய்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்கு செலுத்தும் வகையில் சாய்தளம், சக்கர நாற்காலி வசதிகள். போதிய தன்னார்வலர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 40%க்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் 100 சதவீத வாக்கினை உறுதி செய்திடும் பொருட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம், சுயபுகைப்பட பதாகை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன பேரணி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் நகர அரங்கம் வரை நடைபெற்றது. வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவ்வித அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி,மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் மகேஷ்,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *