கோவை மாவட்டம் வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன்அமீது அலுவலகத்தில் அப்பகுதி வார்டு செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் நேற்று நடைபெற்றது

இக்கூட்டத்தில் முன்னதாக வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் பரிந்துரையின் பேரில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நட்சத்திர வேட்பாளராக டி. லட்சுமணசிங் என்பவரை நேற்று அறிவிக்கப்பட்டதை த்தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் நாள் அறிவித்த நாளிலிருந்தே வாக்காளர்களை தொடர்ந்து நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருவதை மேலும் தீவிரப்படுத்தி கழக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அதற்கான உறுதி மொழியேற்றனர்

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீ ராம் கேஸ் ஏஜன்சிஸ் பொன்னையா, ஹைபாரஸ்ட் பாலகிருஷ்ணன், ஷேக்கல்முடி அருணாசலம், பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சாய் கிருஷ்ணன், மாணவரணி நகரச்செயலாளர் லோகேஷ், நகர அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *