ஈரோடு தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆனந்த் அவர்கள் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலரும் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிந்துஜா அவர்களிடம் தங்களது மேற்கு சட்டமன்றத் தொகுதி க்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செங்கோட்டையன் அவர்களும் உடன் இருந்தார் மேலும் திரு செங்கோட்டையன் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கின்றது எனவே இந்த 2026 தேர்தல் தமிழக வெற்றி கழகத்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்து தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆவது உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.