திருவொற்றியூர்.ஏப். 5

சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் சன்னதியில் தெருவில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பெற நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி திருவொற்றியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி, திருவெற்றியூர் மண்டலம் 1 ல் நமது வாக்கு நமது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபன். மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துணை வட்டாட்சியர் தேர்தல் செயல் பொறியாளர் மாநகராட்சி ஊழியர்கள் இவர்களுடன் 100 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் மோட்டார் பைக்கில் வீதிகளில் சென்று பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சந்தித்து தவறாமல் வாக்களிக்க வேண்டும், என விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டரிக்கைகளை விநியோகித்தனர்.

பேரணியின் முடிவில் 100% மக்கள் வாக்களிக்க உறுதிமொழி எடுத்தனர். வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *