போடிநாயக்கனூர் நகர டவுன் கார் மற்றும் வேன் ஓட்டுநர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி டவுன், கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் போடி திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து எதிர்வரும் ஏப்ரல்23, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தங்களது முழு ஆதரவை தருமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியில் போடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்..லட்சுமணன் போடி நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் போடி நகர்மன்ற முன்னாள் சேர்மன் வி.ஆர்.பழனிராஜ் உள்ளிட்ட போடி நகர திமுக நிர்வாகிகள், வார்டு கழகம், சார்பு அணி, போடி நகர்மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்