பெண்களை இழிவாக பேசிய உதய நிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரி திருவொற்றியூர் தேரடியில் த. வெ. க வினர் திருவொற்றியூர் எம் எல் ஏ செந்தில் குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் எஸ். ஜி. சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் ஏ. ஆனந்தகுமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை கிழித்து போராட்டம் நடத்தினர்


அப்போது அங்கு வந்த தி. மு.க வினர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மண்டல குழு தலைவர் தி. மு தனியரசு தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே. பி.சங்கர் உட்பட சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் த. வெ. க. தி. மு.க போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கைது செய்யப்பட்ட போது தி. மு.க மண்டல குழு தலைவர் தி. மு தனியரசுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அதே போல திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மேற்கு பகுதி செயலாளர் வை.ம அருள்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *