தமிழக முதல்வர் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறி திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப் பட்ட சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும்திமுகவினர் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன.

தவெக அரசின் கைது நடவடிக் கையை கண்டித்து மதுரை புற நகர் திமுக சார்பில் ஒத்தக் கடைபகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.


ஒத்தக்கடை பகுதியில் திரண்ட திமுகவினர் த.வெ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய வாறு போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை காவல்து றையினர் கைது செய்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *