தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43-வது அமைப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டஅலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இயக்கக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

அமைப்பு தின நிகழ்ச்சியில் மாநகராட்சியின் வட்டார செயலாளர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2.8.1984 முதல் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியானது மாணவர் நலன் ஆசிரியர் நலன் சமூக நலனுக்காக செய்த தியாகங்களையும், செயல்பாடுகளையும் எதிர்காலத்தில் மாணவர் நலன், ஆசிரியர் நலன், சமூக நலனுக்காக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு களையும் விளக்கிப் பேசினார்.

மாவட்டப் பொருளாளர் எமிமாள் ஞான செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஜெய முருகன், அமலதாஸ், ஷர்மிளா, மாரீஸ்வரி, ரீட்டா ராணி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *