கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்டம் மதுக்கரை குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது…
கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளை முன்னதாக , கலைவாணி கல்வி குழுமங்களின் நிறுவனர் ஆர்.கிருஷ்ணசாமி ,மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி,கலைவாணி மாடல் பள்ளி தாளாளர் நித்யா ராஜ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்..
கடந்த இரண்டு நாட்களாக,நடைபெற்ற,இதில் மதுக்கரை குறுமையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
சப் ஜூனியர்,ஜூனியர்,சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இதில்,தொடர் ஓட்டம்,ஓட்டப்பந்தயம்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல் ,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன..
போட்டிகளில் மாணவிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளியும்,மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வெள்ளலூர் நிர்மல் மாதா பள்ளியும் கைப்பற்றின..
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன்,மற்றும் பள்ளியின் தாளாளர் நித்யா ராஜ்குமார்,பள்ளி முதல்வர் மீனாட்சி ஆகியோர் வழங்கினர்…