தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை அலுவலக பூமி பூஜை திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
குண்டடம், ஏப்ரல் 06-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் அஇஅதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆசிர்வாதத்துடன், எழுச்சி நாயகன் அதிமுக கழக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின்படி, தலைமை கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின்படி (05.04.2026) குண்டடம் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாராபுரம் சட்டமன்றத் தொகுதிதேர்தல் பணிமனை அலுவலக பூமி பூஜை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக மாவட்ட இணை செயலாளர் சத்தியபாமா,ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில் குமார், செல்வகுமார், மாவட்ட அமைத்தலைவர் காமராஜ் ,மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தாராபுரம் நகர செயலாளர் ராஜேந்திரன்,
மாவட்ட இளைஞர் பாசறை, மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்பு பிரிவினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, பாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் 2000க்கும் மேற்பட்டவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..