இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில் பழைய நகராட்சியாக இருந்தபோது ஒண்ணாம் ரயில்வே கேட் பகுதியில் வடபுறம் பகுதியிலிருந்து ரயில்வே தண்டவாளத்தின் கீழ் பகுதி வழியாக தென்பகுதிக்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது
இது பழைய காலத்து நடைமுறையாகும் இந்த நிலையில் அதனை சரி செய்து பாதாள சாக்கடை அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திற்கு 18 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி அதன் பிறகு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஒன்றாம் ரயில்வே கேட் வடபுறம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தண்டவாளம் பள்ளம் விழுகிறது ஆகையால் பணியில் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் தடை உத்தரவு போட்டதால் கடந்த பல வாரங்களாக பாதாள சாக்கடை பணிகள் அங்கு நடைபெறவில்லை. இந்த நிலையில் வருகிற நாலாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது மேலும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் என்று மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் தீர்வு காணும் ஆறு கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று ஒன்றாம் ரயில்வே கேட்டு பகுதிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார். ரயில்வே கேட் மூடிய போது பொதுமக்கள் எவ்வாறு சிரமப்படுகின்றனர் என்பதையும் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு மேயர் ஜெகன் கூறுகையில் ஒன்னாம் ரயில்வே கேட் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது
நாலு வகையான பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளது 1986. 2006. 2022 .2025 ஆகிய நான்கு திட்டங்கள் உள்ளது ரயில்வே தண்டவாளம் கீழே பாதாள சாக்கடை செல்கிறது ரயில்வே நிர்வாகம் ரயில்வே தண்டவாளம் போடும்போது பாதாள சாக்கடையின் சேம்பர் மூடப்பட்டு மேலே ரயில்வே தண்டலம் போடப்பட்டுள்ளது இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பல வருடங்களாக பிரச்சனை நடந்து வருகிறது
அடைப்பை சரி செய்ய முடியவில்லை ஒரு வருடமாக இந்த பிரச்சனை நடந்து வருகிறது ரயில்வே நிர்வாகத்திற்கு பணம் செலுத்திய பின்பும் அன்று கிரவுண்ட் வழியாக வழியாக பம்பிங் பண்ணி பணிகளை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது நாளை காலைக்குள் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கிடைக்குமா என்று கேட்கப்படும் இல்லையென்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக தோண்டப்பட்ட பாதாள சாக்கடை குழி மூடப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்.
பொதுமக்கள் கோரிக்கை வைத்த பல மணி நேரத்தில் உடனடியாக மேயர்ஜெகன் நேரில் ஆயும் மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார். மேலும் வரும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி நிரந்தர தீர்வு காணும் வகையில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் மேயர் ஜெகன் தெரிவித்தார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் திமுக நிர்வாகி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தன ர்