தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்:
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட தலைவரும் மாநில செயலாளருமான (DMS) மரு. இரா ஜெஸ்லின் தலைமையில், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மரு.செந்தில் சேகர் (DMS), மாவட்டச் செயலாளர் மரு. முகமது இப்ராகிம் (DPH) , துணைத் தலைவர் மரு. ராஜலட்சுமி, இணைச் செயலாளர்கள் மரு. திருமலை குமார், கார்த்திக் அறிவுடை நம்பி, மற்றும் மருத்துவர்கள் தேவி கற்பூரநாயகி, சங்கரி, செல்வ பாலா, நிர்மல் , ராஜேஷ், பாலகணேஷ், உமா மகேஸ்வரி, அபிநயா, முகேஷ், நசீம் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் கொலைகள் ஆகியவையை தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் (TNGDA) வன்மையாக கண்டிப்பதோடு, அரசுக்கு பின்வரும் வேண்டுகோளை வைக்கிறது
பாலியல் கொடும்குற்றச் செயல்கள் மற்றும் கொலை செய்யப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை உடல் கூராய்வு செய்யும் மருத்துவர்கள் சொல்லல்லா துயரம் அடைகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, இதனை முழுவதுமாக நிறுத்த அரசு கடுமையான சட்டங்கள் ஏற்றுவது இக்காலத்திற்கு மிகவும் தேவையானதாக உள்ளது என அனைத்து அரசு மருத்துவர்களும் கருதுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு, நீதிமன்ற வழங்கும் தீர்ப்போடு சேர்த்து, அவர்களின் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவது(Total penilectomy & Chemical/Surgical castration) குறித்து சட்டம் இயற்ற இச்சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
பெண்களும் பெண் குழந்தைகளும் நமது நாட்டின் பொக்கிஷங்கள் வாழ்க தமிழ் மரு. இரா ஜெஸ்லின்,மாவட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் தெரிவித்தார்