வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 கால்பந்து பயிற்றுநர்கள் தேர்வு.
கால்பந்து பயிற்சிகளுக்கான சி சர்டிபிகேட் கோர்ஸ் ஆனது, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனுமதி பெற்று, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் அனுகிரக இன்டர்நேஷனல் பள்ளியில் 25/3/26 முதல் 5/4/26 மிகச் சிறப்பாக நடத்தியது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் நடத்திய D சர்டிபிகேட் கோர்ஸில் பயிற்சி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் வென்ற, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பயிற்றுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 24 நபர்கள் மட்டுமே இந்த பயிற்சியில் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதில் நமது திண்டுக்கல்லை சேர்ந்த 23 நபர்கள் பங்கு பெற்றுள்ளனர். இது அகில இந்திய அளவில் முதல் முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் நிறைவு விழாவானது திண்டுக்கல் சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கால்பந்து கழக ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, அனுக்ரஹா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஜஸ்வந்த், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், இந்த தேர்வு முகாமிற்கு கால்பந்து பயிற்சிகளுக்கு பயிற்றுவிப்பாளரான பார்த்தசாரதி துளசி, இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை கலந்து கொண்டு கால்பந்து பயிற்சிகளுக்கு அறிவுரையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.