பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் பாப்பம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பகுதிக்கு வருகை தந்த வேட்பாளருக்கு, பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களைச் சந்தித்த முனைவர் பெ. பழனியப்பன் அவர்கள், முதியவர்களிடம் ஆசி பெற்றும், இளைஞர்களுடன் கலந்துரையாடியும் ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தான் எப்போதும் பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.