திண்டுக்கல் மாவட்ட அனைத்து தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளீர் சுய உதவிக் குழுவின் மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டி கோரிக்கை மனு மகளிர் சுய உதவி குழுவினர்.
இக்குழுவின் மூலம் பெற்ற கடனை கொண்டு சிறு மற்றும் குருந்தொழில் செய்த வந்த நிலையில் தற்போது தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் குழுவின் மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனுவில் கனவன் இருந்த போது பெற்ற கடனை, தற்போது கனவன் இறந்த நிலையில் தற்சமயம் கடனை செலுத்துகிற வில்லை என்றும் கை குழந்தையுடன் கண்ணீர் மல்க தமது கோரிக்கை முன்வைத்தும், இது போன்ற தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.