பென்னாகரம்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி, ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் வந்தனர்,
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும், இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கஜேந்திரன் தனது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படைசூழ அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் நகர், பிடிஓ ஆபீஸ் பஸ் நிறுத்தம்,முள்ளுவாடி,பேருந்து நிலையம்,கடைவீதி வழியாக பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு ( உதவி ஆணையர், ஆயம்) அவர்களிடம் கஜேந்திரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்பொழுது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் மாற்று வேட்பாளராக தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.