மன்னார்குடி., ஏப்ரல் 06
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார் இந்நிலையில் இன்று காலை அவர் மன்னார்குடி தேரடியில் இருந்து அமமுக,அதிமுக,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என 5000க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர்.
வழி நெடுகிலும் வேட்பாளருக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கூட்டணி கட்சியினரும் சால்வை அணிவித்தும் மலர்தூவியும் மாலை அணிவித்தும் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மன்னார்குடி நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து வ உ சி சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரனிடம் வேட்பாளர் எஸ்.காமராஜ் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.