காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாயம்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து – இருவர் காயம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே தாயம்பாளையம் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது ராமநாதபுரம் மாவட்டம் முத்துக்குளத்தூர் பகுதியை சேர்ந்த வீரபோஸ் (25), விறகு ஏற்றி காங்கேயம் காடையூர் நோக்கி லாரி ஓட்டி வந்தார். அவருடன் ரவிசங்கர் (16) இருந்தார்.

குண்டடம் – ஊதியூர் சாலையில் தாயம்பாளையம் அருகே வந்தபோது, சாலை வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன விபத்துக்குப் பிறகு லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநர் வீரபோஸை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் மீட்டனர். விபத்தை கண்ட ரவிசங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் உடனடியாக அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இருவரும் தாயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர் காங்கேயம் – தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் காரணமாக மாற்றுப்பாதையில் சென்றதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், விபத்தில் அருகிலிருந்த மின்கம்பம் சேதமடைந்ததுடன், தோட்டத்தில் இருந்த 5-க்கும் மேற்பட்ட கம்பிவேலி கம்பங்கள் உடைந்தன. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் குண்டடம் மற்றும் ஊதியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சீரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *