துறையூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்

துறையூர் ஏப்-07
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை தனியார் திருமண மண்டபத்தில் 06-04-2026 அன்று காலை 9 மணி அளவில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் எம் லெனின் பிரசாத்தை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே கருப்புசாமி, ராணி ஸ்டாலின் குமார் ஆகியோர் திமுக எம்எல்ஏக்காளாக இருந்துள்ளனர்.இந்த முறை முதல்வர் கேட்டு கொண்டதால் துறையூர் தனி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.இருந்தாலும் துறையூர் தொகுதியை வெற்றி பெற செய்து கழக தலைவர் மு.க.ஸ்டாலிடம் சமர்பிப்போம் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் பாலக்கரையிலிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், முத்துச்செல்வன், அசோகன், பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன், வெள்ளையன், கிட்டப்பா, நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் சோபனபுரம் கனகராஜ், கோட்டாத்தூர் ராமராஜ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் அம்மன் பாபு, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், வர்த்தக அணி தர்ஷினி திருமூர்த்தி, ரெங்கநாதபுரம் கார்த்திக், பிரபாகரன், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார், கண்ணனூர் குமார், ரவிச்சந்திரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் தொட்டியம் சரவணன், திருச்சி கலை, நகர செயலாளர் ராமநாதன், வட்டார தலைவர் அரவிந்தன், தேமுதிக மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, நகர செயலாளர் சங்கர்,விசிக மாவட்ட செயலாளர் சங்கர்,மநீம, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மதியம் 1:55 மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.லெனின் பிரசாத் துறையூர் தொகுதி (தனி) தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தேர்தல் பார்வையாளர் பிஜய் குமார் தாஸ்.,இ.ஆ.ப., துணை தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர் சிவகுமார் உடனிருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *