மேற்கு தாம்பரம் அய்யாசாமி தெருவில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சின்னையா திறந்து வைத்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரகுராமன் தலைமையில்,
தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ம.கரிகாலன்,பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வேதா சுப்ரமணியம் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் இரா.வெங்கடேசன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் வேணுகோபால்,புரட்சி பாரதம் கட்சியின் தாம்பரம் தொகுதி மாவட்ட செயலாளர் ஜே. எட்வின் சுதாகர்இந்திய ஜனநாயக கட்சியின் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் L. செபாஸ்டியன்,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கே.கே. பிரபு பாண்டியன், புரட்சித் தமிழகம் கட்சியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பி. ஹரிசங்கர், ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது
இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்