மன்னார்குடி., ஏப்ரல். 09
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தேரடி பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அங்கு திரண்ட பொதுமக்கள் வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு மேள தாளம் முழங்க மலர் தூவி வரவேற்றனர் அதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மன்னார்குடிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை கண்ட ஒரே முதல்வர் மு க ஸ்டாலின் இது மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் மன்னார்குடி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சிகளை கொண்டு வந்து பெருமை சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
மன்னார்குடிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளேன். புதிய பேருந்து நிலையம் , பாதாள சாக்கடை திட்டம் , கிராமப்புறங்கள் தோறும் பாலங்கள், சாலைகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்த்த எனக்கு நான்காவது முறையாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.