ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.பு.ம.மு.கழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார், முதுகுளத்தூர் கிராமம் தூரி கஞ்சீரங்குலம் ஏட்டு செரி பகுதிவழியாக தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தூரிமற்றும்ஏட்டுச் செரி சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர், தன்னை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்களுடன் நேரில் பேசி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
இந்த பிரசாரத்தின் போது பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் டாக்டர் ராம்குமாரை ஆர்வத்துடன் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் அடிப்படை தேவைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு டாக்டர் ராம்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நிருபர் செந்தில்குமார்