தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420

தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தீவிர பிரச்சாரம்.

புரட்சிகர இளைஞர் முன்னணி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் இந்திராணிவெற்றிபெற, புரட்சிகர – இளைஞர் முன்னணிதாராபுரம் தொகுதி முழுவதிலும் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி திமுக கூட்டணிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதில் புறநகர் செயலாளர் கவி, செய்தியா ளர்களை சந்தித்து, திமுக மற்றும் அதன் 5 கூட்டணி வேட்பாளர்களுக்கு பெருவாரி வாக்குகளை வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்த – வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரச்சாரத்தின் போது, கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறும் மோடி அரசு பாரதி ஜனதா ஆட்சியின் பல்வேறு நெருக் கடிகள், மாநில உரிமைகள் குறைவு, நிதி மற்றும் வரி பாரபட்சம், சமூக வேறுபாடுகள் ஆகிய தீமைகளை எடுத்துக்
கூறி, தமிழ்நாட்டை முன்னேற்றும் ஒரே வழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியே என்றார்.

புரட்சிகர இளைஞர் முன் னணி தலைமையினர் மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள் செந்தில்குமார், திருமூர்த்தி, செல்வராசு, செங்கொடி மற்றும் பிற முன்னணியினர் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் அத்துடன், கலை நிகழ்ச்சிகள், சிறப்பு நாடகங்கள் மற்றும் அரசியல் உரைகள் களத்தில் இறக்கி வெற்றி பெறச் செய்வது திமுகவின் நோக்கமாகும். குறிப்பாக, அருந்ததி மக்களின் நலன், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றத்தை நிலைநாட்டும் பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *