கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) சார்பில், நான்காவது முறையாக போட்டியிடும் சாக்கோட்டை க. அன்பழகன், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளான மீன் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம்,சாந்தி நகர், நூர் நகர், பைராகித்தோப்பு செக்காங்கன்னி,காந்திநகர் ஸ்ரீ நகர் காலனி, உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரிக்கை விடுத்தார். இதில் மாநகர துணை மேயர் சு.ப தமிழழகன், திமுக, காங்கிரஸ்,விசிக,தேமுதிக மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சி நிர்வாகிகளும்,மற்றும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *