வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எல்.லட்சுமணசிங்கிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல வால்பாறை நகர் பகுதியில் உள்ள பூத் எண் 207 மற்றும் 208 ககு உட்பட்ட பகுதிகளில் வார்டு செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன்தலைமையில் நகரச்செயலாளர் மயில்கணேசன் முன்னிலையில் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி அதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சண்முகவேல், பாஜக மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல், மண்டல் தலைவர் எஸ்.செந்தில் முருகன் நிர்வாகிகள் எம்.ஆர்.கே.பாலாஜி, வினு, பாலு, பிரதீஷ்,லோகேஷ், ரகு, ரவி, சுரேஷ், சின்னப்பன், கவியரசன் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்