செய்தியாளர் ராஜாராம் குமார்

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். கடும் வெயில் தாக்கம் இருந்தபோதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக உரிமையை செலுத்தினர்.
30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் மொத்தம் 10,14,070 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை முதலே வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்றது.
காலை 11 மணி நிலவரப்படி 37% வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 56.83% வாக்குகளும் பதிவானது. தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு 72.40% ஆக உயர்ந்தது. மாலை 5 மணிக்கு 86.92% வாக்குகள் பதிவாகி, இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி 89.13% வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையிலும் கட்சிகள் இந்த தேர்தலில் முக்கிய சக்திகளாகக் கருதப்படுகின்றன.
மொத்தத்தில், புதுச்சேரியில் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருப்பது ஜனநாயக விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.