தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் இந்திராணி ஆதி திராவிடர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார்.
மூலனூர் சுற்று வட்டார பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஊர்நாயக்கன்வலசு , சோமன்கோட்டை, மேட்டுவலசு, வஞ்சிபாளையம், கொல்லப்பட்டி, குமாரகவுண்டன் வலசு உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அதிக அளவில் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் மூலனூர் பகுதியில் முருங்கைக்காய் குளிர் பத்தின கிடங்கு மற்றும் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் 5.61-கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
என வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் இந்திராணி ஐந்தாண்டு கால திமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கோட்டை மூலனூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.