நாமக்கல்.
ஏப்ரல் 11
தமிழகத்தில், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக, விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் செல்ல. ராசாமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
நாமக்கல்லில், விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் செல்ல. ராசாமணி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது கூறிய செல்ல. ராசா மணி, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், விவசாயம் முன்னேற்ற கழகம் PACL முதலீட்டாளர்கள் , களப்பணியாளர்கள் ஆகியோர், எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவின்படி, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது..
அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாள் வைத்த கோரிக்கையான நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை 3 ஆயிரத்து 500 ரூபாய் , கரும்புக்கு டன்னுக்கு 4 ஆயிரத்து 500 ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், அதிமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து தரப்பு மக்களின் கவர்ந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது, நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரியின் குறுக்கே 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் விவசாய விரோத திமுக அரசு அந்த திட்டத்தை அடியோடு ரத்து செய்து விட்டது வேதனை அளிக்கிறது. இதே திட்டத்தை, கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்து அந்தத் திட்டத்தை பணம் இல்லை என்று கூறி திமுக அரசு கைவிட்டுவிட்டது. அதற்காகத்தான் திமுகவை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.
காமராஜர் காலத்து கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆட்சி நிறைவே.
எனவே விவசாயிகளின் நலம் கருதி, திட்டங்களை செயல்படுத்தும் அதிமுகவிற்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கின்றோம்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே விவசாய நிலங்களை பாதிக்கின்ற வகையில் சிப்காட் திட்டத்தை திமுக அரசு கொண்டுவர உள்ளது. எனவே இதனை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் தங்கமணி இடம் கோரிக்கை விடுத்தோம். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். அதற்காகத்தான் அதிமுகவை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
தங்கள் கோரிக்கை மற்றும் உரிமைக்காக அறவழியில் போராடிவரும் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு.
கறிக்கோழி பண்ணை உயர்த்தி தர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 12 பேர் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். எனவே திமுக அகற்றப்பட வேண்டிய ஆட்சியாகும். இனி திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. திமுகவுக்கு அடிக்கின்ற வாக்கு, தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.
ஒட்டுமொத்தமாக அனைவரும் அதிமுகவை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளோம். தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத்தினர் பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்து, பணத்தை திரும்ப பெற முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு திமுக அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை குறித்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடம் அளித்த போது அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக பணம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே விவசாயம் முன்னேற்றக் கழகத்தினர் PACL முதலீட்டாளர்கள் களப்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைவரும் அதிமுகவுக்கு ஆதரிப்பது என முடிவு செய்தது உள்ளோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிகளும் 25 ஆயிரம் வாக்குகள் அதிமுகவுக்கு அளிப்போம். அவர்கள் பிரச்சாரத்தை அழைத்தால் நாங்கள் செல்வோம்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கும் சீர் கெட்டு போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் அடியோடு ஒழிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஆட்சிக்கு வந்தது. நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் என்பவர், வெற்றி பெற்றால் தங்க காசு வழங்கப்படும் என பொய் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார். ஆனால் அதனை வழங்கவில்லை. அதனால்தான் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என கூறுகிறோம்.
வளையப்பட்டி பகுதியில், சிப்காட் அமைக்க கூடாது என நாங்கள் போராடி வருகின்ற வேளையில், திமுகவினர் 100 நாள் திட்டப் பணியாளர்களை அழைத்து வந்து அந்தத் திட்டம் வேண்டுமென, போராடுகிறார்கள். விவசாயிகளை பாதிக்கின்ற திட்டத்தை கொண்டு வர திமுக துடிக்கிறது. ஏற்கனவே விவசாயிகள் சிப்காட் திட்டம் வேண்டாம், நிலம் கொடுக்க மாட்டோம் வேண்டும் என பிரமாண பத்திரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம்.
விவசாயிகளை பாதிக்கின்ற திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது விவசாயிகளை பாதிக்கின்ற திட்டங்களை திமுக நிறைவேற்ற துடிக்கிறது.
எடப்பாடி ஆட்சி காலத்தில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தொழிற்சாலைகளை கொண்டுவர திமுக முயற்சி செய்கிறது. ஒட்டுமொத்தமாக பொதுமக்கள், விவசாய பெருமக்களின் பாதிக்கின்ற அரசாக திமுக உள்ளது.
வளையப்பட்டி பகுதியில், சிப்காட் சுற்றுவட்டார மக்கள், கடந்த தேர்தலை புறக்கணிக்காமல், வாக்களித்து இருந்தால் திமுக தோல்வி அடைந்திருக்கும். போராடுபவர்கள்மீது பொய் வழக்கு போடுவதுதான் திமுக என்றும் விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் செல்ல ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்