ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

துறையூர் ஏப்-11
திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின்படி, முசிறி டிஎஸ்பி முத்துக்குமார் அறிவுறுத்தலின் படி துறையூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் காஞ்சனா, பவித்ரா உள்ளிட்ட போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து நிலையம், பாலக்கரை பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சீட்டு பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களின் வாகன பதிவு எண்ணிற்கு ஆன்லைன் அபராதம் விதிக்கப்பட்டது.

துறையூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்களிடம் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் அறிவுறுத்தினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *