ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.

பெரம்பலூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.

பெரம்பலூர்.ஏப்.11. 2026 ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் கட்சி ,நாயுடு சங்கம் போன்ற கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோடு கிராமம் கிராமமாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.

அந்த வகையில், பெரம்பலூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கா. இறையூர் காலணியில் இன்று கொளுத்தும் வெயிலிலும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். ஐயா எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தால் அவர் அறிவித்திருந்த அத்தனை திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும், தங்கள் கிராமத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமோ அவற்றையெல்லாம் அதிவிரைவாக செயல்படுத்துவேன் என்றும், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த பகுதிக்கு என்ன என்ன திட்டங்கள் கொண்டு வந்தேன் என்பதையும் வாக்காளர்களிடம் நினைவு படுத்தினார்.

ஓட்டு கேட்டு இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தேவேந்திர குலத்தார்கள் ஐந்தாவது ஆண்டு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வனை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆதரவு தருவதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *