எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு. வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.பள்ளிவாசலில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு :-

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி தனி சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் இரா. செந்தில் செல்வன் சீர்காழி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காரைமேடு,தென்னலக்குடி, அண்ணன்பெருமாள் கோவில்,மேலச்சாலை உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது வேட்பாளருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர் அப்பொழுது பேசிய சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் செய்த நலத்திட்டங்களை கூறி உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளோம் என கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலச்சாலை பள்ளிவாசலில் ஜமாத்தாகளிடம் சட்டமன்ற வேட்பாளர் செந்தில் செல்வன், சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஜமாத்தார்கள் மாலை அணிவித்து வேட்பாளருக்கு உற்சாக

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *