தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் நாஞ்சிக்கோட்டை சாலையில் வைரம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு இளைஞர்கள் பொதுமக்கள் அணி அணியாக ஆதரவு அளித்து வருகின்றனர். நேற்று காலை ரயில் நகர் இபி காலனி, மாதா கோட்டை,காவேரி நகர்,மூவேந்தர் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இளைஞர்கள் பட்டாசு வெடித்து மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முரளிதரன் பேசுகையில், தஞ்சாவூர் தொகுதி மக்களை என்னுடைய உயிராக நினைக்கிறேன். இதற்கு முன்னால் இருந்தவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை விட நான் உங்களின் பிரச்னையை அறிந்தவன் என்ற முறையில் உங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பேன். எனக்கு வைரம் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.